மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

தற்கொலைப்படைத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி!

தற்கொலைப்படைத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை, இந்திய ராணுவ முகாமிற்குள் புகுந்து ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒரு பெண் உட்பட 2 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் புறநகர்ப் பகுதியிலிருந்து பதான்கோட் செல்லும் சாலையில், சுன்ஜவான் என்ற இடத்தில் பல ஏக்கர் பரப்பளவில் குடியிருப்புடன் கூடிய மிகப் பெரிய ராணுவ முகாம் உள்ளது.

இன்று (பிப்ரவரி 10) அதிகாலை 4.45 மணியளவில் ராணுவ முகாமிற்குள் 3 தீவிரவாதிகள் புகுந்து, திடீரென ராணுவ வீரர்களின் குடியிருப்புகளை நோக்கி தாக்குதல் நடத்தினர்.

அதிகாலை நேரம் என்பதால், ராணுவ வீரர்கள் சுதாரிப்பதற்குள், தீவிரவாதிகளின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 2 பேரில், ஒருவர் ராணுவ வீரரின் மகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடைபெறுவதால் கூடுதலாக பாதுகாப்புப் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகள் பதுங்கியிருந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதால், அப்பகுதி முழுவதையும் ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்துத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் நடத்திவருகின்றனர் என்று உளவுத் துறை ஏஜென்சி தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகள் எவ்வாறு ராணுவ முகாமிற்குள் நுழைந்தனர் என்ற விவரம் சரிவரத் தெரியவில்லை என்றும், அது குறித்து விசாரணை தொடங்கியிருப்பதாகவும் மூத்த காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவிலுள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 10 பிப் 2018