மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

சன்னி லியோனுக்கு எதிராகப் புகார்!

சன்னி லியோனுக்கு எதிராகப் புகார்!

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் படங்களில் நடித்துவந்த சன்னி லியோன் தமிழில் நாயகியாக அறிமுகமாகவிருக்கும் திரைப்படம் வீரமாதேவி. தென்னிந்தியக் கலாச்சாரங்களை மையமாகக் கொண்டு மிகுந்த பொருட்செலவில் சரித்திரப் படமாக உருவாகும் இப்படத்தை வி.சி. வடிவுடையான் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இதன் படப்படிப்பு சென்னையில் பிப்ரவரி 7ஆம் தேதி பூஜையுடன் துவங்கியது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் சன்னி லியோனுக்கு எதிராகப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள், பெண்கள் ஆகியோருக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராகவும், ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்கு எதிராகவும் போராடும் சமூக ஆர்வலரான எமி என்ற இனோச் மோசஸ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான படப்பிடிப்புத் தளத்தில் நடைபெறும் ‘வீரமாதேவி’ படப்பிடிப்பில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கலந்துகொள்ளவுள்ளார். இது குறித்து அந்தப் பகுதியில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. சன்னி லியோன் இணையதளத்தில் வெளியாகும் ஆபாச படங்கள் குழந்தைகள் மனதைக் கெடுக்கும் வகையில் உள்ளது. ‘வீரமாதேவி’ படம் தமிழ்க் கலாச்சாரத்தைச் சொல்லும் படம் என்று கூறப்படுகிறது. சன்னி லியோன் படப்பிடிப்பில் கலந்துகொண்டால் கவர்ச்சியாக நடிப்பார். அதைக் காண அங்கு அதிக அளவில் இளைஞர்கள் கூடுவார்கள். எனவே இந்தப் படப்பிடிப்பில் சன்னி லியோன் கலந்துகொள்ளத் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் இதுகுறித்து ஏற்கனவே நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 10 பிப் 2018