சர்க்கரை: இருப்புநிலை வரம்பு நிர்ணயம்!

சர்க்கரை விலையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நோக்கில் சர்க்கரை ஆலைகளின் இருப்பு நிலைக்கான உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
சர்க்கரை விலைச் சரிவினைக் கட்டுப்படுத்த சர்க்கரை ஆலைகளின் இருப்புநிலை அளவை மத்திய அரசு நிர்ணயித்துள்ளதாக அறிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு நேற்று (பிப்ரவரி 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்க்கரை ஆலைகள் பிப்ரவரி மாத இறுதிக்குள் தங்களது மொத்த உற்பத்தியிலிருந்து 83 முதல் 86 சதவிகிதம் வரை இருப்பு நிலையை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளது.