மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

ராஜா Vs யுவன்: பியார் பிரேமா காதல்!

ராஜா Vs யுவன்: பியார் பிரேமா காதல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ரைஸா, ஹரிஷ் கல்யாண் இருவரும் இணைந்து நடித்துவரும் ’பியார் பிரேமா காதல்’ படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகியுள்ளது.

இளன் இயக்கிவரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதோடு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.ஆர்.எஸ்.பிலிம்ஸ் மூலம் தயாரித்துவருகிறார். ரொமான்டிக் காமெடி வகையில் உருவாகிவரும் இதற்கு மணிக்குமரன் சங்கரா படத்தொகுப்பாளராகவும், ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிகின்றனர். இதன் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் ஹரிஷ் கல்யாண், இளையராஜாவின் இசையில் வெளியான ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ’ பாடலை இயர் போன் மூலம் ஒரு பக்கம் கேட்கிறார். மற்றொரு பக்கம் ரைஸா யுவன் இசையில் வெளியான ‘தீப்பிடிக்க... தீப்பிடிக்க முத்தம் கொடுடா’ பாடலைக் கேட்கிறார். இதன் மூலம் ராஜாவின் பாடல்களை விரும்பிக் கேட்பவராக ஹரிஷும், யுவன் இசையை விரும்பிக் கேட்பவராக ரைஸாவும் நடித்திருப்பார்கள் எனக் கருத முடிகிறது.

இந்தப் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13ஆம் தேதி வெளியிடவுள்ளனர். இவர்கள் இருவரின் காதலைச் சேர்த்துவைப்பது ராஜா பாடலா அல்லது யுவன் பாடலா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

சனி 10 பிப் 2018