மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

மானிய ஸ்கூட்டர் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

மானிய ஸ்கூட்டர் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் இன்று (பிப்ரவரி 10) மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மானிய ஸ்கூட்டர் விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 5ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு விண்ணப்பிக்க ஓட்டுநர் உரிமம் அல்லது எல்.எல்.ஆர் அவசியம் என்பதால் ஏராளமான பெண்கள் கடந்த சில நாட்களாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்குப் படையெடுத்தனர். இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது. பின்னர் கால அவகாசம் நீடிக்கவேண்டும் என மக்களின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 10ஆம் தேதி கடைசி நாள் எனக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் காலஅவகாசம் முடிவதால் தமிழகம் முழுவதும் இதுவரையில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் முதல் கட்டமாக ஒரு லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கப்பட உள்ளது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 10 பிப் 2018