மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

தீபா இல்லத்தில் போலி அதிகாரி சோதனை!

தீபா இல்லத்தில் போலி அதிகாரி சோதனை!

தீபாவின் வீட்டிற்கு வருமான வரித் துறை அதிகாரி என்ற பெயரில் சோதனை நடத்த வந்த போலி அதிகாரி போலீசாரைக் கண்டதும் தப்பியோடினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகளான தீபா, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை நிர்வகித்துவருகிறார். தீபாவின் இல்லம் தி.நகரிலுள்ள சிவஞானம் தெருவில் உள்ளது. இன்று (பிப்ரவரி 10) வீட்டில் தீபாவின் கணவர் மாதவன் மட்டும் இருந்துள்ளார். காலை 7 மணியளவில் இல்லத்துக்கு வந்த ஒரு நபர் தன்னை வருமான வரித் துறை துணை ஆணையர் மித்தேஷ் குமார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு வீட்டைச் சோதனையிடப்போவதாகத் தெரிவித்துள்ளார். 10 மணிக்கு மேலும் சில அதிகாரிகள் வரப்போவதாகவும் கூறியுள்ளார்.

அதையடுத்து அவரை வீட்டிலுள்ள ஒரு அறையில் அமர வைத்துள்ளனர். தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த தீபாவின் வழக்கறிஞர் குழு எதற்காக வருமான வரித் துறை சோதனை என்று கேட்டுள்ளனர். ஆனால் அந்த நபரிடமிருந்து முறையான பதில் இல்லாத காரணத்தால் மாம்பலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

உடனே அங்கு விரைந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான தகவலை அளித்த அவர், உடனே அங்கிருந்து தப்பியோடினார். காவல் துறையினர் அவரைத் துரத்தி ஓடினர், ஆனால் பிடிக்க முடியவில்லை. போலி அடையாள அட்டையும் பிடிபட்டுள்ள நிலையில், அவரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 10 பிப் 2018