எஃகு உற்பத்தியில் இந்தியா சாதனை!


2017ஆம் ஆண்டில் இந்தியாவின் கச்சா எஃகு (ஸ்டீல்) உற்பத்தி 10 கோடி டன்களைத் தாண்டியுள்ளது. மேலும், ஸ்டீல் உற்பத்தியில் 6 சதவிகித வளர்ச்சியை இந்தியா பதிவு செய்துள்ளது.
இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இறக்குமதிக் குவிப்புக்கு எதிரான வரி, குறைந்தபட்ச இறக்குமதி விலை, தரக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் அதில் அடக்கம். மேலும், தேசிய ஸ்டீல் கொள்கை 2017 மூலமாக உள்நாட்டு ஸ்டீல் உற்பத்தி பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கச்சா எஃகு உற்பத்தியை 300 மில்லியன் டன்னாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.