மோகன்லால் - நதியா: மீண்டும் கூட்டணி!

முப்பத்திரெண்டு வருடங்களுக்குப் பின்னர் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார் நதியா.
1984ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான 'நோக்கெத்த தூரத்து கண்ணும் நட்டு' படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் நதியா. அதன் பின் சில படங்களில் அவரோடு இணைந்து நடித்தாலும் 1986ஆம் ஆண்டு வெளியான பஞ்சாகினி படத்திற்குப் பின் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. தற்போது மோகன்லால் நடிக்கும் நீராளி படத்தில் இணைந்துள்ள நதியா 32 வருடங்களுக்குப் பின் அவரோடு இணைந்து நடிக்கிறார்.