மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

கோவை அரசு மருத்துவர்கள் சாதனை!

கோவை அரசு மருத்துவர்கள் சாதனை!

கோவை அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு 2 இதய வால்வுகளை மாற்றி, நுண்ணிய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

நாகை மாவட்டம் ஏகராசிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சரவணன், மைனாவதி. 30 வயதான மைனாவதி கடந்த சில மாதங்களாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டுவந்தார். இதன் காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மைனாவதியை சேர்த்து பரிசோதனை செய்தார்கள். இதய அறுவை சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, இதயத்தில் 3 வால்வுகள் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கடந்த ஜனவரி 8ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை துறைத் தலைவர் சீனிவாசன் தலைமையில், 8 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், மைனாவதிக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

அறுவை சிகிச்சையில், இதயத்தில் செயல்படாமல் இருந்த 2 வால்வுகளை அகற்றிப் புதிய வால்வுகளை மைனாவதிக்குப் பொருத்தினர். மற்றொரு வால்வைச் சரி செய்து, மீண்டும் பொருத்தினர். மிக நுண்ணியமான அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளதாக, அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினரை, அரசு மருத்துவமனை டீன் அசோகன் பாராட்டினார்.

"மைனாவதிக்கு முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். தனியார் மருத்துவமனைகளில் இந்தச் சிகிச்சையை மேற்கொள்ளக் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் செலவாகும். அரசு மருத்துவமனையில், முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு பொதுமக்கள் பயனடையலாம்’ என்று அசோகன் தெரிவித்தார்.

தமிழகத்தில் சென்னை, கோவை என அரசு மருத்துவர்கள் மக்களைக் காப்பாற்றும் பல நுண்ணிய அறுவை சிகிச்சைகளைத் தொடர்ந்து செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 10 பிப் 2018