காதலர் தினப் பரிசு வேண்டுமா?

ஸ்மார்ட் போன் நிறுவனங்களுள் ஒன்றான ஜியோமி நிறுவனம், 2017இல் ரெட்மி நோட் 4 மொபைலை அதிகளவு விற்றதற்குப் பிறகு தனது அடுத்த ஸ்மார்ட் போனை வெளியிட முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் இதுவரை வெளியிட்டுள்ள அனைத்து ஸ்மார்ட் போன்களும் குறைந்த விலையில் அதிக சேமிப்புத் திறன், அதிக பேட்டரி லைஃப், சிறந்த கேமரா என பட்ஜெட்டிற்குள் இருப்பதால் மக்கள் அதிகளவில் வாங்கிப் பயனடைகின்றனர்.
2017இல் வெளியான சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியலில் ரெட்மி நோட் 4 அதிகளவில் விற்பனையாகி முதலிடம் பெற்றுள்ளதையடுத்து, அடுத்த படைப்பாக நோட் 5 ஸ்மார்ட் போனை காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14) வெளியிடுள்ளதாக தனது அதிகாரபூர்வ இணையதளமான mi.comஇல் தெரிவித்துள்ளனர்.