மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

பாஜக ஆட்சி மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

பாஜக ஆட்சி மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று (பிப்ரவரி 10) குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தொடர்ச்சியாக மத்திய பாஜக அரசு மீது குற்றச்சாட்டுகள் கூறி வருகிறார். இதன் ஒருபகுதியாக, பாஜக அரசில் அங்கம் வகிப்பவர்கள் சிறந்த நிர்வாகிகள் இல்லையென்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று (பிப்ரவரி 9) இதற்குப் பதிலளித்தார். அப்போது, கடந்த பத்தாண்டுகளாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் ப.சிதம்பரம். அதில், “இந்தியாவின் வளர்ச்சி விகிதம் நன்றாகயிருப்பதாகச் சொல்கிறார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. ஆனால், 30 ஆண்டுகளாக இருந்த சராசரியைவிட, தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பதாகக் கூறியுள்ளார் உலகவங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு” என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 10 பிப் 2018