மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

தென்னாப்பிரிக்காவின் ஆட்டம்: வருத்தப்படும் ஸ்மித்!

தென்னாப்பிரிக்காவின் ஆட்டம்: வருத்தப்படும் ஸ்மித்!

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணி மோசமான தோல்வியைச் சந்தித்துவருவது குறித்து முன்னாள் கேப்டன் க்ரீம் ஸ்மித் தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 3-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்தத் தொடரில் இதுவரை இந்திய அணியின் கேப்டன் 318 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் சேர்த்த மட்டையாளராகத் திகழ்கிறார். பந்துவீச்சாளர்களில் யுஜ்வேந்திர சஹல் (11), குல்தீப் யாதவ் (10) ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் க்ரீம் ஸ்மித் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது “இந்திய அணி சிறப்பாக விளையாடி 3-0 என முன்னிலை பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க அணியில் முக்கியமான முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் இந்தத் தோல்விகளைத் தழுவியுள்ளது இளம் வீரர்கள் இன்னும் தயாராகவில்லை என்பதை இது உணர்த்துகிறது” எனத் தெரிவித்தார்.

“தென்னாப்பிரிக்க இளம் வீரர்களுக்கு சிறப்பாக எப்படி விளையாட வேண்டும் என கற்றுத்தருவது அவசியமாகும். அவர்கள் முதல் மூன்று ஆட்டங்களில் சொதப்பியது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்திய அணியின் சிறப்பான ஆட்டமும் இந்த வெற்றிக்குக் காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 10 பிப் 2018