மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

கிச்சன் கீர்த்தனா: ராகி சேமியா உப்புமா!

கிச்சன் கீர்த்தனா: ராகி சேமியா உப்புமா!

தேவையானவை:

ராகி சேமியா - 100 கிராம்

கேரட் - 1 (சிறியது)

பீன்ஸ் - 5

சின்ன வெங்காயம் - 5

இஞ்சி - சிறிதளவு

பச்சை மிளகாய் - 1

கொத்தமல்லி - சிறிதளவு

எலுமிச்சைச் சாறு - சிறிதளவு

உப்பு - தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய், கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 1

செய்முறை:

சேமியாவை அது மூழ்கும் அளவு தண்ணீரில் சிறிது உப்பு போட்டு ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பிறகு நீரை வடிய வைக்க வேண்டும். வடிய வைத்த சேமியாவை இட்லிப் பாத்திரத்தில் வைத்து இட்லி அவிப்பதுபோல் வேக வைக்கவும். சீக்கிரமே வெந்துவிடும். வெந்ததும் எடுத்து உதிர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்

அடுத்து வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும். கேரட், பீன்ஸ் இவற்றை மிக மெல்லியதாக நறுக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணெய்விட்டுச் சூடானதும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ் ஆகியவற்றை அடுத்தடுத்துச் சேர்த்து வதக்கவும். காய் வேக சிறிது தண்ணீர் தெளித்து, சிறிது உப்பு மேலாக தூவி மூடி வேக வைக்கவும். ஏற்கெனவே சேமியாவில் சிறிது உப்பு சேர்த்துள்ளோம்.

காய் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள சேமியாவைச் சேர்த்துக் கிளறி விடவும். எல்லாம் சேர்ந்து சேமியா சூடேறியதும், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி தூவி இறக்கவும். தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கீர்த்தனா தத்துவம்:

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 10 பிப் 2018