மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித் தொகை உயர்வு !

ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித் தொகை உயர்வு !

ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை 80,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஐஐடி(இந்திய தொழில்நுட்ப மையம்), ஐஐஎஸ்இஆர் (இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்), என்ஐடி, (தேசிய தொழில்நுட்ப மையம்), ஐஐஎஸ்சி(இந்திய அறிவியல் மையம்) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், ஆராய்ச்சி படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். மேலும், வெளிநாடுகளில் அவர்களுக்கு அதிக அளவு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இவ்வாறு மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்வதால், அவர்களுடைய திறமையை பயன்படுத்திக் கொள்ள முடியாமல், ஆராய்ச்சிகள் நடைபெறுவது தடைப்படுகிறது. எனவே, அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதைத் தடுக்கும் வகையிலும், உள்நாட்டில் அவர்களுடைய திறமையை பயன்படுத்தும் வகையிலும், பிரதமர் ஆராய்ச்சி பெலோஷிப் (பிஎம்ஆர்எப் )திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை 80 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக 1,650 கோடி ரூபாயை ஒதுக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, ஆண்டுக்கு, 3,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஐஐடி,என்ஐடி உள்ளிட்ட உயர்கல்வி மைய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 2018 - 19ஆம் கல்வியாண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 10 பிப் 2018