மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

குழந்தைநல வாரியம் அமைக்க உத்தரவு!

குழந்தைநல வாரியம் அமைக்க உத்தரவு!

குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் அனைத்து மாநிலங்களிலும் குழந்தைநல வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் நேற்று (பிப்ரவரி 9) உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 9) குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் சிறார்கள் சீர்திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கோரியும் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் மதன் லோகுர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் உள்ளடக்கிய அமர்வு, “அனைத்து மாநிலங்களிலும் சிறார் சீர்திருத்த நீதிமன்றம் மற்றும் சிறார் நலன்புரிக் குழுக்களில் உள்ள பதவிகளை துரிதமாகப் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

சிறார் நீதிபதி (சிறுவர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) 2015 சட்டத்தைச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தங்களின் சொந்த முயற்சியால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பதிவு செய்யும்படி கேட்டு கொண்டது. சிறார் சீர்திருத்தப் பள்ளிகளில், அவர்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் அனைத்து மாநிலங்களிலும் முறையாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் குழந்தைநல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 10 பிப் 2018