மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

மல்டி ஸ்டார்களால் சிவக்கும் வானம்!

மல்டி ஸ்டார்களால் சிவக்கும் வானம்!

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட நட்சத்திரக் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

காற்று வெளியிடை படத்தின் தோல்விக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடுவதில் தாமதித்துவந்த மணிரத்னம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்தாக பல முன்னணி நட்சத்திரங்களை ஒன்றிணைத்துப் புதிய படம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பகத் ஃபாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் நடிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்தப் படத்திலிருந்து பகத் ஃபாசில் விலகியிருப்பதாகவும், அதற்குப் பதிலாக அருண் விஜய் நடிக்கவிருப்பதாகவும், அதிதி ராவ் மீண்டும் மணிரத்னம் படத்தில் இணைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அது தற்போது உறுதியாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. ‘செக்க சிவந்த வானம்’ என்ற தலைப்பில் தமிழிலும், நவாப் என்ற பெயரில் தெலுங்கிலும் இந்தப் படம் உருவாகவிருக்கிறது. அந்த போஸ்டரில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 10 பிப் 2018