மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

பறக்கும் ரயில் பயணிகளுக்கு!

பறக்கும் ரயில் பயணிகளுக்கு!

கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 10, 11) ஆகிய இரண்டு நாள்கள் ரத்து செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே பராமரிப்புப் பணி காரணமாக வார விடுமுறை நாள்களில் பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே கூறியதாவது: “கடற்கரை - வேளச்சேரி இடையே பாரமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் இன்றும் நாளையும் பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று (பிப்ரவரி 10) கடற்கரை - வேளச்சேரி இடையே காலை 9.50 மணியிலிருந்து மாலை 4 மணி வரையும், வேளச்சேரி - கடற்கரை இடையே காலை 9.50 மணியிலிருந்து மாலை 4.10 மணி வரையும் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (பிப்ரவரி 11) காலை 9.50 மணியிலிருந்து மாலை 4.20 மணி வரை சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.”

சென்னையில் பெரும்பாலானவர்கள் பறக்கும் ரயிலில்தான் பயணம் செய்கின்றனர். அதனால், வேலைக்குச் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, விடுமுறை நாள்களில் ரத்து செய்யப்படுவதால், வெளியே செல்பவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது தெரியாமலேயே சிலர் ரயிலுக்காகக் காத்திருக்கவும் செய்கின்றனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 10 பிப் 2018