மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

பியூட்டி ப்ரியா: 24 மணி நேரத்தில் 15 நிமிடங்கள் போதும்!

பியூட்டி ப்ரியா: 24 மணி நேரத்தில் 15 நிமிடங்கள் போதும்!

தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்கி, சிற்சில செய்முறைகளைத் தினமும் செய்துவந்தால், கண்களுக்கென க்ரீம்கள், தலைமுடிக்கென சிகிச்சை, உதட்டுக்கான சாயங்கள் என்று கஷ்டப்படத் தேவையில்லை.

கண்கள்:

முகத்துக்குப் பொலிவும், வசீகரமும் சேர்ப்பவை கண்கள். சிலருக்கு அந்தக் கண்களின் புருவத்தில் தேவையான அளவுக்கு முடி இருக்காது. இதற்கு சுத்தமான விளக்கெண்ணெயைக் கொஞ்சமாக எடுத்து புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால், முடி அடர்த்தியாக வளரும். சோர்வான கண்களுக்கு, ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட், வட்டமாக வெட்டிய வெள்ளரித் துண்டு போன்றவற்றை கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம். நன்றாகப் பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகளையோ அல்லது அதனுடன் கேரட் ஜூஸைக் கலந்தோ கண்களுக்கு அடியில் தடவிவந்தால், கரு வளையங்கள் மறையும்.

உதடுகள்:

தினமும் சிறிதளவு ‘வேசலின்’ எடுத்து உங்கள் உதடுகளில் தடவிவந்தால், மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும்.

தலைமுடி:

இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால் முடிக்குக் கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தில் எண்ணெயை (ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில் அல்லது சாதாரண தேங்காய் எண்ணெய்) எடுத்துக்கொண்டு சூடுபடுத்த வேண்டும். லேசான சூடு போதுமானது. அவ்வாறு சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். கால்களைப் பராமரிக்க அமரும் அந்த நேரத்தில் இதையும் செய்து முடித்தால் உங்கள் நேரம் மிச்சமாகும்.

முகம்:

இரவு உறங்கச் செல்லும்முன் நாள் முழுவதும் முகத்தில் படிந்துள்ள அழுக்கை அகற்றுவது முக்கியமான வேலையாக இருக்க வேண்டும். எண்ணெய் பசையுள்ள சருமத்தை ‘வால்நட்ஸ் க்ரப்’ கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத்தை மிருதுவான ‘பேபி ஆயில்’ கொண்டும் துடைக்கலாம். அவ்வாறு துடைக்கும்போது உங்கள் கைகளின் அசைவு வட்ட வாக்கில் இருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட்டு தரமான ‘நைட் க்ரீம்’களை உபயோகப்படுத்த வேண்டும். எளிதான மாய்சரைசரும் உபயோகப்படுத்தலாம். இது, உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. இந்த மாய்சரைசரை முகம், கைகள், கழுத்து மற்றும் கண்களுக்குக் கீழேயும் உபயோகிக்கலாம்.

பாதம்:

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 10 பிப் 2018