மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

ஏற்றுமதி மேம்பாட்டு ஊக்கத்தொகை!

ஏற்றுமதி மேம்பாட்டு ஊக்கத்தொகை!

நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதியாளர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களுக்குச் செலவிடப்படும் தொகை ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 8ஆம் தேதி தேசியத் தலைநகர் டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் இதுகுறித்துப் பேசிய சுரேஷ் பிரபு மேலும் கூறுகையில், “ஏற்றுமதி சேவைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை அதிகரித்து வருகிறது. வணிக, சேவைகள் ஏற்றுமதித் திட்டம், முன்கூட்டிய அங்கீகாரத் திட்டம் மற்றும் மூலதன பொருள்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் ஆகிய திட்டங்களுக்கான நிதி இந்த நிதியாண்டில் 1,20,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ஏற்றுமதியின் அளவு அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும்.

பட்ஜெட் உரையில் நம்முடைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏற்றுமதித் துறை இந்த ஆண்டில் 15 சதவிகித வளர்ச்சி காணும் என்று கூறியிருந்தார். ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்களாலும், சிறப்பான செயல்பாடுகளாலும் ஏற்றுமதித் துறையின் வளர்ச்சி சாத்தியமாகும். 2016-17ஆம் நிதியாண்டில் ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்களுக்கான நிதி ரூ.76,980 கோடியாக இருந்தது. ஏற்றுமதித் துறையில் தொடர்ந்து கவனம் செலுத்துவதால் ஏற்றுமதித் துறை வேகமாக வளர்ச்சி காணும்” என்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 10 பிப் 2018