மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: சிவபுராணம் - கதையின் மூலம் சொல்லப்பட்ட விஞ்ஞானம்!

சிறப்புக் கட்டுரை: சிவபுராணம் - கதையின் மூலம் சொல்லப்பட்ட விஞ்ஞானம்!

சத்குரு ஜகி வாசுதேவ்

சிவபுராணம், அடிப்படை விஞ்ஞானத்தின் பல அம்சங்களை எவ்வாறு விளக்கியுள்ளது என்பதையும் மேலும் ஒருவர் தன் கட்டுபாடுகளைக் கடந்து போவதற்கு அது எப்படி ஒரு சக்தியான கருவியாக இருக்கிறது என்பதையும் சத்குரு இங்கே தெளிவுபடுத்துகிறார்.

சத்குரு: ஷிவா என்று நாம் அழைக்கும் இந்த பரந்த வெறுமை, எல்லையற்றதும் பொருள்தன்மை அற்றதுமான ஒன்று. காலவரம்பு அற்று எப்போதும் இருப்பது. ஆனால், மனிதரின் புரிதல், உருவம் எனும் எல்லைக்குள் இருப்பதால், நம் கலாசாரத்திலும், பாரம்பர்யத்திலும் சிவனுக்குப் பல அற்புதமான வடிவங்களை உருவாக்கினோம். புதிரான, புரிந்துகொள்ள இயலாத ஈஸ்வரன், அனுகூலமான ஷம்போ, எளிமையான போலா, வேதங்கள், சாஸ்திரங்கள், தந்திரங்கள் கற்பிக்கும் ஆசிரியரும், சிறந்த குருவுமான தட்சிணாமூர்த்தி, எளிதாக மன்னிக்கும் அசுதோஷ், படைத்தவனின் உதிரத்தில் தோய்ந்த பைரவா, முற்றிலும் நிசப்தமான அச்சலேஷ்வரா, நடனத்தில் தேர்ந்த நடராஜா, இப்படி வாழ்வில் எத்தனை அம்சங்கள் இருக்கிறதோ, அத்தனை அம்சங்களும் அவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக, உலகின் பல பாகங்களிலும் தெய்விகம் என்று மக்கள் நன்மை என்று கருதுவதையே குறிப்பிடுவார்கள். ஆனால், சிவபுராணம் வாசித்தால், சிவனை நல்லவன் என்றோ, தீயவன் என்றோ அடையாளப்படுத்த முடியாது. அவன் அனைத்துமானவன். அவன் அழகற்றவன், அவனே மிகவும் அழகானவன்; அவன் சிறந்தவன், அவனே மோசமானவன்; அவன் மிகவும் ஒழுக்கமானவன், அவனே ஒரு குடிகாரன்; கடவுள்கள், பேய்கள் என அனைத்து விதமான ஜீவனும் அவனை வழிபடும். அவனைப் பற்றி ஏற்றுக்கொள்ள முடியாத கதைகளை, மிகவும் நாகரிகம் என்று கருதப்படும் தற்போதைய சமூகம், அனைத்து விதங்களிலும் அழித்துவிட்டாலும், அவன் சாரம் அதுதான். வாழ்வின் முற்றிலும் மாறுபட்ட அம்சங்கள் அனைத்தும் அடங்கியதுதான் சிவனின் ஆளுமை. பிரபஞ்சத்தின் அத்துனை சிக்கலான தன்மைகளின் கலவை ஒரே நபரின் உள்ளே போடப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த ஒருவரை ஏற்றுக்கொண்டால், பிறகு நீங்கள் இந்த வாழ்வையே கடந்தவராக ஆகிறீர்கள். வாழ்வின் பெரும் போராட்டமே, ஏதோ ஒன்றை இது அழகானது, அழகற்றது, நல்லது, தீயது என்று தேர்ந்தெடுப்பதுதான். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் உள்ள சிவனை ஏற்றுக்கொண்டால் பிறகு எவரோடும் உங்களுக்குப் பிரச்னை என்பதே இருக்காது. சிவபுராணத்தின் கதைகளைக் கவனமாக வாசித்தால் முழு நவீன இயற்பியலும் அதில் அழகாக உணர்த்தப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

இது ஒரு பேச்சு வழக்கு கலாசாரம். விஞ்ஞானம் கதைகளின் வாயிலாக உணர்த்தப்பட்டது. இங்கு அனைத்துமே உருவகப்படுத்தப்பட்டது. ஆனால், எங்கோ மக்கள் கதைகளை மட்டும் வைத்துக்கொண்டு அறிவியலை விட்டுவிட்டார்கள். நாளடைவில், கேலிக் கூத்தாகும் அளவுக்கு அந்த கதைகளை மிகைப்படுத்தி விட்டார்கள். மீண்டும் அறிவியலை கதைகளுக்குள் புகுத்தினால், அறிவியலை வெளிப்படுத்தும் ஓர் அழகான வழியாக அது இருக்கும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 10 பிப் 2018