மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

சென்னையில் சிக்கிய பிரபல ரவுடிகள் பாணியில் சந்தித்த வாட்ஸப் வடிவேலுவும் கிச்சன் கீர்த்தனாவும்!

நண்பர் ஒருத்தர் ரொம்ப நாளா பொலம்பிக்கிட்டே இருந்தாரு. “எப்படித்தான் இந்த உப்புமாவ திங்கிறாங்களோ... பாரபட்சம் இல்லாம உப்புமா செஞ்சி கொடுமைப்படுத்துற மனைவிகளைத் தண்டிக்க சட்டம் ஏதும் இல்லையா” ன்னு பொலம்புனவரு நம்ம பக்கம் ரூட்ட திருப்புனாரு..

“ஏன் வடிவேலு... உங்க வீட்ல எல்லாம் உப்புமா செய்யறதில்லையா... உனக்கு அப்போ அவ்ளோ பிடிக்குமா... இதுவரைக்கும் எதுவுமே சொன்னதுல்லையே”ன்னு ஆரம்பிச்சார்.

ஆஹா... நமக்கே ஆயுதத்தைத் திருப்பி விடறாரேன்னு உஷார் ஆகி, “இப்ப என்ன பிரச்னை உங்களுக்கு?”ன்னு கேட்கப் போயி, “எப்படி வீட்ல உப்புமா சமைக்கறத நிறுத்தறது...” ன்னு கேட்டாரு.

சீப்பை ஒளிச்சு வெச்சா கல்யாணம் நடக்காதுங்கிற கதையா ரவை டப்பாவை ஒளிச்சு வெச்சா உப்புமா செய்ய முடியாதா என்ன... கேழ்வரகு உப்புமா, அரிசி உப்புமா, இட்லி உப்புமான்னு அசத்திட மாட்டாங்களா.

அதனால சொன்னேன், “நண்பா.. என்னால நிறுத்தவோ, சட்டம் ஏற்படுத்தி தடுக்கவோ எல்லாம் முடியாது. ஆனா, எப்படி செய்யறாங்க. எந்த சூழல்ல செய்யறாங்க. இதற்கு பின்னணி என்னன்னு கண்டுபிடிச்சி சொல்றேன்”னு சொல்லிட்டு வந்தேன்.

எனக்குத் தெரிந்தவரே கிச்சன் ஸ்பெஷலிஸ்ட் நம்ம கிச்சன் கீர்த்தனாதானே. மிக நன்றாக சமைப்பாங்களாம். (என்று செவிவழி செய்தி. பாவம் அவர் கணவர்).

யாரு சொன்னா?

அவங்களே சொல்லிக்கிட்டாங்க.

நேத்து சாயங்காலம் லேசா பேச்சு கொடுத்தப்போ, சென்னையில் சிக்கின ரவுடி கும்பல் கதையைப்போல் வரிசையாகப் பல திடுக்கிடும் தகவலா வந்து கொட்டுச்சு.

அந்த குரூப்ல ஒருத்தர் வழியில போகும்போது போலீஸ்கிட்ட மாட்டி, மொபைல்போன் செக் பண்ணா, வாட்ஸ்அப் குரூப்பெல்லாம் அமைச்சு மொத்த ரவுடிகளும் பேசிக்கிறது, மீட்டப், டிஸ்கஷன், அப்படின்னு ஏகப்பட்ட விஷயம் மாட்டுச்சுன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். அப்புறமா குரூப்பா படத்துல வர்ற மாதிரி மாட்டியிருக்காங்க.

அதே ட்ரண்ட்டதான் நானும் யூஸ் பண்ணேன். ஏங்க நீங்களும் ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிச்சா என்ன? பல பேருக்கு உதவியா இருக்கும்ல்ல.. அப்படின்னதுதான் போச்சு.

“ஹல்ல்ல்லோ.. நான் இருக்க அப்பார்ட்மென்ட்க்கு மட்டும் இல்லாம பக்கத்துல இருக்க 16 அப்பார்ட்மென்ட்க்கும் (சுத்துப்பட்டி 16 ஊருக்கும் நாட்டாமைங்கிறது போல) தனித்தனியா வாட்ஸ்அப் குரூப் வெச்சிருக்கேன். எல்லாத்துக்கும் நான் ஒரே ஆளுதான் அட்மின். (கழகத்தின் ஒரே நிரந்தர தலைவி போலருக்கு)

ஒவ்வொரு அபார்ட்மென்ட்ல இருக்க லேடீஸுக்கும் மாசா மாசம் மீட்டிங் வெச்சி, சமையல் போட்டியெல்லாம் நடத்தி பரிசு குடுக்குறோம். முப்பது வகை சப்பாத்தி, முப்பது வகை குழம்புகள், பலவிதமான தோசைகள் அப்படின்னு போட்டி வெச்சு பொளந்துக்கிட்டு இருக்கோம்ய்யா என் சிப்ஸூ...” என்ற பெரிய உண்மையைப் போட்டு உடைத்தார்.

விடுவேனா.. அந்த உப்புமா மேட்டர் பத்தி பேச்சுக்கொடுத்தேன்.

“ஆமா.. இந்த உப்புமால்லாம் செய்வீங்களா?”

“ போனவாரம் பெஸ்ட் உப்புமாவுக்குத்தான் போட்டி வெச்சு கப்பு வாங்குனாங்க. விதம்விதமான உப்புமா செய்வது எப்படி, மேகியை விட சீக்கிரமாக உப்புமா செய்வது எப்படி? ‘சலிக்காத உப்புமாவும் மறக்காத நக்மாவும்’ அப்படின்னு தலைப்புல கட்டுரை போட்டியெல்லாம் வெச்சோம். உப்புமாவுக்கு மட்டுமே இதுவரைக்கும் மூணு புத்தகம் வெளியிட்டிருக்கோம் வடிவேலு. சாம்பிள் பாக்குறீங்களா? இப்ப கூட மீட்டிங்தான் போறேன், வர்றீங்களா? ” என்று கேட்டதுதான் மிச்சம். அங்க ஓட ஆரம்பிச்சதுதான். இங்கே வந்து நிக்கிறேன்.

ஆமா... அவங்க கேக்கை அரிவாளால வெட்டுனாங்களாம். இவங்க உப்புமாவ எதால கிளறியிருப்பாங்க?

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 10 பிப் 2018