மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

காயமடைந்த விஜய் பட வில்லன்!

காயமடைந்த விஜய் பட வில்லன்!

துப்பாக்கி பட வில்லன் நடிகர் வித்யூத் ஜாம்வால் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் காயமடைந்தார்.

தமிழில் அஜித் நடித்த பில்லா 2, விஜய் நடித்த துப்பாக்கி படங்களில் வில்லனாகவும் அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பனாகவும் நடித்தவர் இந்தி நடிகர் வித்யூத் ஜாம்வால். இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இவரது நடிப்பில் இந்தியில் கமாண்டோ 2 வெளியானது. தற்போது இவர் ஜங்கலி என்ற இந்தி படத்தில் நடித்துவருகிறார்.

ஜங்கலி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்துவருகிறது. யானைகளுக்கும் மனிதனுக்குமான வித்தியாசமான உறவைச் சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் ஜன்னல் வழியாக வித்யூத் வெளியே குதிப்பது போலக் காட்சி படமாக்கப்படவிருந்தது.

இதற்காக முன்கூட்டியே கயிறு கட்டி பாதுகாப்பாகக் குதிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வெளியே குதிக்கும்போது எதிர்பாராதவிதமாக அவரது தலையில் அடிபட்டது. இதையடுத்து உடனடியாக அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இதையடுத்து ஓரிரு நாள்கள் ஓய்வுக்குப் பிறகு வித்யூத் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 10 பிப் 2018