மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

ஓரிரு நாட்களில் 113 மீனவர்கள் விடுதலை!

ஓரிரு நாட்களில் 113 மீனவர்கள் விடுதலை!

இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 113 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறித் தமிழக மீனவர்களைக் கைதுசெய்வதும், அவர்களது படகுகளைப் பறிமுதல்செய்வதும், சிறைகளில் அடைப்பதும் தொடர்ந்துவருகிறது. இந்த நிலைமை மாற வேண்டும் என தமிழக அரசு மற்றும் மீனவர்கள் சார்பாக இந்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது. இருப்பினும், இந்த நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை.

இம்மாத இறுதியில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு வரவிருக்கிறார். அதன் காரணமாக, நல்லெண்ண அடிப்படையில் 113 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை சட்டத் துறை பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்ட 8 மீனவர்களைத் தவிர 113 மீனவர்களை விடுதலை செய்யப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

113 மீனவர்களும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகர்கோவில், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மீனவர்கள் ஓரிரு நாட்களில் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 9 பிப் 2018