மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

அன்புச் செழியனுக்குத் தொடரும் நெருக்கடி!

அன்புச் செழியனுக்குத் தொடரும் நெருக்கடி!

சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் வருமானம் குறித்துக் கணக்கிட வருமான வரித் துறையினருக்கு எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தேடப்பட்டுவந்தவர் சினிமா பைனான்சியர் அன்புச் செழியன். சென்னையிலும் மதுரையிலும் உள்ள இவரது வீடுகளில் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத பணம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் அன்புச் செழியன் முறையாக வரி செலுத்தாமல் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை எதிர்த்து வருமான வரி தீர்வு ஆணையத்தில் அன்புச் செழியன் இரண்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் இதனை அந்த ஆணையம் நிராகரித்தது.

இந்தக் கூடுதல் வருமானத்திற்கான வரியைச் செலுத்தி விடுவதாகக் கூறி, அன்புச் செழியன் தரப்பில் வருமான வரித் துறை தீர்வு ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. இதை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அன்புச் செழியன், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 9 பிப் 2018