டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிப்பு!


கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 4.73 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
2017 டிசம்பரில் இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 1.06 பில்லியனாக இருந்த நிலையில், ஜனவரி மாதத்தில் அதன் எண்ணிக்கை 4.73 சதவிகித உயர்வுடன் 1.11 பில்லியனாக அதிகரித்துள்ளதாக பிப்ரவரி 8ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பு அடிப்படையில் ஜனவரி மாதத்தில் ரூ.131.95 லட்சம் கோடி மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மதிப்பானது கடந்த ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள இரண்டாவது அதிகபட்ச பரிவர்த்தனையாகும். முன்னதாக 2017 மார்ச் மாதம் ரூ.149.59 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.