மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

மனசாட்சியுடன் எழுதுங்கள்: பொங்கிய கணபதி!

மனசாட்சியுடன் எழுதுங்கள்: பொங்கிய கணபதி!

லஞ்சம் பெற்ற வழக்கில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி, “நானும் மனிதன்தான். என்னைப் பற்றிய செய்தியை மனசாட்சியுடன் எழுத வேண்டும்” என்று செய்தியாளர்களிடம் ஆவேசமாக தெரிவித்தார்.

உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கு ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புப் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவருடன் இடைத்தரகராகச் செயல்பட்ட பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். இதேபோல், பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநர் மதிவாணன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதையடுத்து துணைவேந்தர் பதவியிலிருந்து கணபதியை இடைநீக்கம் செய்வதாக ஆளுநர் அறிவித்தார்.

இதற்கிடையே ஜாமீன் கோரி கணபதி மற்றும் தர்மராஜ் தாக்கல் செய்த மனுவைக் கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று பிப்ரவரி 8இல் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், கணபதியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன் மீதான விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காகக் கணபதி, தர்மராஜ் ஆகியோர் இன்று (பிப்ரவரி 9) ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். நீதிபதி ஜான் மினு இன்று விடுமுறை என்பதால், மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மதுரசேகரன் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி ஜான் மினுவின் முன்னிலையிலேயே, விசாரணை நடைபெறும் எனக் கூறி, விசாரணையை 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டார்.

விசாரணையின்போது நீதிபதி முன்னிலையில் கணபதி, ”ஊடகங்களில் வெளியான செய்திகளால், ஒரு மூத்த குடிமகனுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள்கூட எனக்கு மறுக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமகனுக்குக் கிடைக்கும் சலுகை மட்டுமல்லாமல், முதல் வகுப்பு அறையும் மறுக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு அறை ஒதுக்கப்படும் வரை, வயதானவன் என்பதைக் கருத்தில்கொண்டு சுடுநீர் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

அவரது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு சிறைத் துறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வெள்ளி 9 பிப் 2018