மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் ஜீயர்!

உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் ஜீயர்!

மக்களின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக திருவில்லிப்புத்தூர் ஜீயர் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூரில் தினமணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து பேசினார். இது தினமணி நாளிதழில் கட்டுரையாகவும் வெளிவந்த நிலையில், ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் வைரமுத்து கூறியதாக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.

வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக திருவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் கடந்த மாதம் அறிவித்து உண்ணாவிரதமும் இருந்தார். அதிகாரிகளின் வேண்டுகோளினால் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். பிப்ரவரி 3ஆம் தேதி வரை கெடு விதிப்பதாகவும், அதற்குள் வைரமுத்து ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கோரவில்லை என்றால் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் ஜீயர் அறிவித்திருந்தார். ஆனால் வைரமுத்து இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை.

எனவே, தான் கூறியபடி நேற்று திருவில்லிப்புத்தூரில் உண்ணாவிரதம் தொடங்கிய ஜீயர், ஆண்டாள் கூறும்வரை உண்ணாவிரதத்தைத் தொடர்வேன் என்றும் கூறியிருந்தார். இரண்டாவது நாளாக இன்றும் உண்ணாவிரதம் தொடர்ந்தது. மன்னார்குடி செண்பகராம ஜீயர், பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் ஜீயரைச் சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். இதையடுத்து ஜீயர் தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வெள்ளி 9 பிப் 2018