எல்லா புகழும் ஜீயருக்கே: அப்டேட் குமாரு

வைரமுத்து ஆண்டாள் மேட்டரை ஆரம்பிச்சு வச்சாலும் வச்சாரு மாசக்கணக்கா ஓடிகிட்டு இருக்கு. இப்ப இருக்குற நேரத்துல எந்த சர்ச்சையும் நாலு அப்டேட்டுக்கு தான் தாங்குது. அதுக்குள்ள இது பழசாகி அடுத்தடுத்து புது மேட்டர் நமக்கு சிக்கிடும். அதை வச்சி, டிவிட்டு மீம்னு பிஸியாகிருவோம். ஆண்டாள் தான் நின்னு விளையாடுது. இதுக்கு காரணம் ஆண்டாளோ, வைரமுத்துவோ இல்ல ஏன் நம்ம எச்.ராஜா கூட இல்ல. எல்லா புகழும் ஜீயரை தான் சேரும். சோடா பாட்டில்ல ஆரம்பிச்சு மதுரை கோயில்ல தீப்பிடிச்ச வரைக்கும் போயி இப்ப உண்ணாவிரத அலப்பறைகள்ல வந்து நிக்குது. இன்னும் எத்தனை நாள் போகும்னு தெரியல. இன்னொரு உண்ணாவிரதம் ஆரம்பிக்கமாட்டாரா, அதை ரெண்டு மணி நேரத்துல முடிக்க மாட்டாரா என்ன? நாம வெயிட் பண்ணுவோம் எதாவது சம்பவம் நடக்கும்..இன்னைக்கு உள்ள மேட்டரை மட்டும் கீழே பாருங்க.
@Srinivtwtz
என் உண்ணாவிரதத்தால் உலக மக்களுக்கு கேடு விளைந்துவிடும் - #ஜீயர்
யாரும் கண்டுக்காததால கைவிடுறன்னு சொல்லுங்கோண்ணா.
@kalpbagya32
தேர்தலில் ஒரு தடவை மக்களை பார்த்து கும்பிட்டு வெற்றிபெற்று 5ஆண்டுகளில் பல முறை மக்களை கும்பிடவைத்துவிடுகின்றனர் !!
@love_twitz
இதுவும் கடந்து போகும்னு பார்த்தா சைடு கொடுத்து அடுத்த பிரச்சனைக்கும் இடம் கொடுத்து சேர்ந்து நிக்கிது #வாழ்க்கை
@Thaadikkaran
நம்ம போட்டோ காமிச்சா, போட்டோ மட்டும் "செம" னு சொல்லிட்டு என்ன மொபைல் கேட்கும்போது சிரிப்பை மட்டும் பதிலாய் தருவது ஜென் நிலை
@HAJAMYDEENNKS
கல்யாணம் ஆகும் வரைதான் காதலர் தினம் கொண்டாடுகிறார்கள் காதலர்கள்...!
@mekalapugazh
தேர்வுக்கு நல்லா படிச்சிட்டுப் போகிறவனைவிட..
பிட் எடுத்துகொண்டு போகிறவனுக்குத்தான்..
அதிக கடவுள் பக்தி இருக்கும்.
@selvaraj851
ஜீயர நம்பி போராட்டத்துக்கு போனவன்லாம் இப்ப நாடோடி சசிக்குமார் மாதிரி ஏமாந்த கடுப்புல இருப்பான்.
@kumarfaculty
ஏர்டெல் மியூசிக் போனில் ஒலித்ததை விட கார்களில் ரிவர்ஸ் எடுக்கும் போது ஒலித்ததே அதிகமாய் இருக்கும்...!!!
@smhrkalifa
பொய் சொல்லக்கூடாதுன்னு எனக்கு சொல்லிக்கொடுத்த அம்மா தான்,
என்னை சாப்பிட வைக்க
தினம் ஒராயிரம் பொய் சொன்னாள்.
@mufthimohamed1
மடாதிபதிகளின் உண்ணா விரதத்தால் தான் மதுரை கோவிலில் தீ பிடித்தது - எஸ்.வி.சேகர்
2000 ரூபாய் நோட்டுல சிப் இருக்குனு சொன்னதுக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல நம்புங்க மக்களே..!
@SJ_Harry19
8 புள்ளி கோலத்தினை குறுக்கும் நெடுக்குமாக இணைக்கும் மனைவி சிறந்த ஓவியராகிறாள்,
தவறியும் அதை மிதிக்காமல் தாண்டும் கணவன் சிறந்த ரசிகனாகிறான்
@senthilcp
என் உண்ணாவிரதத்தால் உலக மக்களுக்கு கேடு விளைந்துவிடும் அதனால அதை கேன்சல்"பண்ணீட்டேன்
ஓஹோ,எந்த மாதிரி கெடுதல் வரும்?
அதான் கேன்சல் பண்ணியாச்சே,விடுங்கப்பா
@smhrkalifa
சவுத் இந்தியன்ஸ் வந்தாலே தண்ணி அதிகம் செலவாகும்னு ஹோட்டல் மேனஜர் சொன்னார்,
ஏன்னு கேட்டேன்,
அவங்க தினமும் குளிப்பாங்க #வடநாட்டுபரிதாபங்கள்
@aysha_yusuff
மொபைல் சார்ஜ் போட்டவன் நிலைமையும் மனைவியை பிரசவ வார்டுக்கு அனுப்புனவன் நிலைமையும் ஒண்ணு....
ஒரு இடத்துல உட்காரவே மாட்டாங்க....
@HAJAMYDEENNKS
முதலாளிகளுக்கு பிடிக்காத தொழிலாளர்களுக்கு பிடித்த மாசம் பிப்ரவரி...!
@mekalapugazh
சென்னையில் இருவேறு உலகங்கள் இயங்குகின்றன.. ஒன்று காஃபி ஷாப்பில்.. மற்றொன்று டீக்கடை பெஞ்சில்.
@amuduarattai
பன்னாட்டு நிறுவனங்களின் வருகைக்கு பிறகே, "ஒரு நிறுவனத்தின், நீண்ட கால விசுவாசா ஊழியர்" என்ற ஒரு இனம் அழிந்தது.
கருப்பு கருணா
அது நாடாளுமன்றம்.தேர்தல் பிரச்சாரக் கூட்டமல்ல என்பதை முன்கூட்டியே சொல்லி அழைச்சிட்டு வாங்கய்யா..!=
ஓவர் சவுண்டா இருக்கு!
-லாக் ஆஃப்