மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

பாஜக ஆசியில்தான் ஆட்சி நடக்கிறது!

பாஜக ஆசியில்தான் ஆட்சி நடக்கிறது!

பாஜகவை வெளியில் எதிர்க்கும் ஆட்சியாளர்கள் அண்டர்கிரவுண்டில் தொடர்பில் இருப்பதாகக் கூறியுள்ள டிடிவி. தினகரன் எம்எல்ஏ, பாஜக ஆசியில்தான் தமிழகத்தில் ஆட்சி நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (பிப்ரவரி 9) செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி. தினகரன், “குருட்டு அதிஷ்ர்ஷ்டத்தில் பதவி கிடைத்ததால், சட்டமன்ற உறுப்பினர்களைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்சியை ஓட்டலாம் என நினைக்கின்றனர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்களை அழைத்து அவரே பேசுவார். ஆனால் தற்போதைய முதல்வரோ அந்தந்த துறை அமைச்சர்களை வைத்துப் பேசும் ஆணவப் போக்கில் செயல்படுகிறார். நிதி நெருக்கடி நிலவும் சூழலில் எம்எல்ஏக்களின் சம்பளத்தை 100 சதவிகிதம் உயர்த்தியது ஏன்? எனக்கு இந்த ஊதிய உயர்வு தேவையில்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டேன்.

மத்திய அரசின் ஆதரவு இருப்பதால் ஆட்சியை ஓட்டிவிடலாம் என நினைக்கின்றனர். இருட்டில் நடப்பவர் பயத்தை மறைப்பதற்காகப் பாட்டுப்பாடுவது போன்று, ஜெயக்குமார் போன்றோர் வாய்ச்சவடால் விடுவதில் ஈடுபடுகின்றனர். இவர்களின் கோமாளித்தனத்தை மக்கள் எள்ளி நகையாடத் தொடங்கிவிட்டனர்.

நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் அப்பகுதி பெரிய பாதிப்பைச் சந்திக்கும். இது, அங்குள்ள மக்களுக்குச் செய்யப்படும் துரோகமாகும்.

பாஜகவுடன் உள்ள நட்பைப் பயன்படுத்தி தமிழகத்துக்கு நீட் தேவையில்லை எனத் தமிழக ஆட்சியாளர்கள் கூறலாம். ஆனால் பூம்பூம் மாடு போன்று மத்திய அரசு கூறுவதற்குத் தலையாட்டுகின்றனர். மத்திய அரசின் கிளை நிறுவனமாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் செயல்படுகின்றனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வெள்ளி 9 பிப் 2018