மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

மணிகார்னிகா: கோபத்தில் கங்கணா

மணிகார்னிகா: கோபத்தில் கங்கணா

ஜான்சி ராணி பிரிட்டிஷ் அதிகாரி மேல் காதல் வயப்பட்டது போல் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக போராட்டங்கள் வலுப்பதற்கு, ‘ஏன் இப்படியெல்லாம் தவறாக சித்தரிக்கிறார்களோ தெரியவில்லை’ என்று கோபப்பட்டுள்ளார் பாலிவுட் நடிகை கங்கணா.

19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஜான்சி ராணி லட்சுமிபாயின் வாழ்க்கை வரலாறு ‘மணிகார்னிகா: தி குயின் ஆஃப் ஜான்சி’ என்ற பெயரில் தயாராகிவருகிறது. இப்படத்தில் தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் ஜான்சி ராணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். தற்போது படம் வெளியாவதற்குள், சர்வ பிரமாண சபை, ராஜ்புத் இனத்தவர்கள் போன்ற இந்து அமைப்பினர் படத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்தப் படத்தில், ஜான்சி ராணி பிரிட்டிஷ் அதிகாரி மேல் காதல் வயப்பட்டது போல் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து கங்கணா தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்துள்ள பேட்டியில், “லட்சுமி பாய் பற்றிய இப்படியொரு கற்பனையே தரம் தாழ்ந்த ஒன்று. நாங்கள் அப்படி நினைக்கவே இல்லை. படத்தில் அப்படியொரு காட்சியும் இல்லை. ஏன் இப்படியெல்லாம் தவறாக சித்தரிக்கிறார்களோ தெரியவில்லை. இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளால் நாங்கள் மன வேதனையும் வருத்தமும் அடைந்திருக்கிறோம். இந்தப் படத்தின் கதையை எழுதியவர் பாகுபலியை எழுதிய விஜேந்திர பிரசாத். அவர் தனது மகளுக்கு மணிகார்னிகா என்ற பெயரைத்தான் வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவர் இவர்கள் கற்பனை செய்வது போல கதை எழுதுவாரா?” என்று தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள படத்தின் இயக்குநர் கிரீஷ், “படத்தில் ஜான்சி ராணியின் கதாபாத்திரம் எந்த வகையிலும் தவறாகச் சித்தரிக்கப்படவில்லை. அதேபோல் ஜான்சி ராணி எவரையும் காதலிப்பது போன்ற காட்சிகளும் இல்லை. இதுபோன்ற எதிர்ப்புகள் படத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்று கூறியுள்ளார்.

இந்தத் திரைப்படம் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது போராட்டங்கள் துவங்கியுள்ள நிலையில், சுதந்திரம் பெற்ற மாதமான ஆகஸ்ட் மாதத்தில் 3ஆம் தேதியன்று படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 9 பிப் 2018