மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

மலர்க்கொத்துக்குப் பதிலாக ஷூ!

மலர்க்கொத்துக்குப் பதிலாக ஷூ!

நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்திருந்த நடிகை தமன்னாவை நோக்கி ஒரு நபர் செருப்பு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த தமன்னா தற்போது பேசியுள்ளார்.

ஹைதராபாத் பகுதியில் மலபார் தங்கம், வைர நகைக்கடை திறப்பு விழா ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக தமன்னா கலந்துகொண்டார். அவரைப் பார்க்க அந்தக் கடையின் அருகே ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அந்த நிகழ்வின்போது ஒரு நபர் தமன்னாவை நோக்கி ஆவேசத்துடன் செருப்பைத் தூக்கி வீசியெறிந்தார்.

ஆனால் சற்றுக் குறி தவறிப் பறந்துவந்த செருப்பு புதிய நகைக்கடை பணியாளர் மீது விழுந்தது. அந்தச் சம்பவத்தின் வீடியோ ஒன்றும் வெளியாகி பலரை அதிர்ச்சியடையவைத்தது. செருப்பு வீசிய கரிமுல்லா என்ற பட்டதாரி நபரை நாராயன்குடா போலீஸார் கைது செய்து விசாரித்ததில், சமீபகாலமாக தமன்னா நடித்த படங்களில் அவரது கதாபாத்திரம் தனக்குப் பிடிக்காததால் அவரைச் செருப்பால் அடிக்க முயன்றதாகத் தெரிவித்தார்.

தமன்னா மீது செருப்பு வீச முயன்ற சம்பவம் சினிமாவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இது குறித்து தமன்னா எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். தற்போது அந்தச் சம்பவம் குறித்து டெக்கான் க்ரானிக்கிளுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 9 பிப் 2018