மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய விமானப் படை அதிகாரி கைது!

பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய விமானப் படை அதிகாரி கைது!

பாகிஸ்தான் உளவுத் துறைக்கு சில முக்கிய ரகசிய ஆவணங்களை அனுப்பியதாகக் கூறி இந்திய விமானப் படை அதிகாரி அருண் மார்வகா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய விமானப் படையின் குரூப் கேப்டனாக அருண் மார்வகா (51) என்பவர் பணியாற்றிவருகிறார். இந்திய விமானப் படை தலைமையகத்துக்குள் எலெக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அருண் கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஸ்மார்ட் போனுடன் சென்றுள்ளார்.

அன்று மத்தியப் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுக் குழு மேற்கொண்ட வழக்கமான சோதனையின்போது அவர் தேவையில்லாத நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் நடத்திய சோதனையில் அதிகாரிகள் அவருடைய செல்போனைப் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் கேப்டன் அருணை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

காவல் துறை விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். பின்னர் அவர், பாகிஸ்தான் உளவுத் துறைக்கு வாட்ஸ் அப் , சமூக வலைத்தளம் ஆகியவை மூலம் இந்திய விமானப் படை தொடர்புடைய தகவல்களை அனுப்பியது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவருடைய முகநூல் , வாட்ஸ் அப் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளிவந்தன.

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகள் பெண்கள் பெயரில் முகநூல் கணக்குத் தொடங்கி விமானப்படை அதிகாரிக்கு நட்பு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களது நட்பை ஏற்றுக்கொண்ட பிறகு தங்களை மாடல் அழகிகள் என்று தெரிவித்துள்ளனர்.

நாளடைவில் நெருக்கமாகப் பழகியுள்ளனர். பின்னர் மொபைல் நம்பரும் பகிரப்பட்டு வாட்ஸ் அப்பில் சாட் செய்யப்பட்டுள்ளது. அருண் ஆபாசமாக சாட் செய்ததை இணையத்தில் அம்பலப்படுத்திவிடுவதாக மிரட்டி, இந்திய விமானப் படையின் பாதுகாப்புத் தகவல்களைப் பகிரும்படி கேட்டுள்ளனர்.

இவ்வாறு ஏன் மிரட்டுகிறார்கள் என்று சந்கேதகப்பட்ட நிலையில் அவர்கள் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகள் என்ற உண்மை முகம் தெரியவந்தது. இதையடுத்து வேறு வழியின்றி அவர் முக்கிய தகவல்கள் மற்றும் படங்களை அவர்களுக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

கடைசியாகத் தலைமையகத்துக்குள் செல்போனுடன் நுழையும்போது அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார். அவரின் வாட்ஸ் அப், முகநூல் பக்கங்களை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்துவருகின்றனர். மூத்த விமானப் படை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், அருண் மார்வகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து டெல்லி சிறப்புப் பிரிவு காவல் துறையினர் கைதுசெய்தனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 9 பிப் 2018