மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

பட்டாசுக்குத் தடை விதிக்கக் கூடாது: தமிழக அரசு!

பட்டாசுக்குத் தடை விதிக்கக் கூடாது: தமிழக அரசு!

நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் டெல்லி உட்பட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது. இது தவிர நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இதன் காரணமாக சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பட்டாசுத் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தனர். கடந்த ஜனவரி 19ஆம் தேதி அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

இந்நிலையில் பட்டாசுக்குத் தடைவிதிக்கப்பட்ட வழக்கு இன்று (பிப்ரவரி 9) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பட்டாசு வெடிப்பதால் மட்டுமே சுற்றுச்சூழல் மாசுபடுவது கிடையாது; பட்டாசுக்குத் தடை விதித்தால் சிவகாசியில் 8 லட்சம் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வெள்ளி 9 பிப் 2018