மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பும் வசதி!

வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பும் வசதி!

வாட்ஸ்அப் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். பீட்டா 2.18.21 மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா 2.18.41 வெர்சன்களில் பண பரிமாற்றம் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. தற்போது இந்தியாவில் அதற்கான சோதனை முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த பண பரிமாற்ற வசதி, மத்திய அரசின் யு.பி.ஐ. (UPI) வழிமுறையைச் சார்ந்து இயங்குகிறது.

அட்டாச்மெண்ட் பகுதியில் கேலரி, வீடியோ, டாக்குமெண்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் தற்போது பண பரிமாற்ற வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் என்பதால், டிஜிட்டல் பணப் பரிமாற்ற எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதுகுறித்து ஃபோன்அரினா வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாட்ஸ்அப்பில் பேமெண்ட் அம்சம் சோதனை செய்யப்படுகிறது என்றாலும் வங்கி கணக்குகளை இணைப்பதில் கோளாறு ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 9 பிப் 2018