மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

சிறப்பு அந்தஸ்து: ஆந்திராவுக்கு ராகுல் ஆதரவு!

சிறப்பு அந்தஸ்து: ஆந்திராவுக்கு ராகுல் ஆதரவு!

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள ராகுல், இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திராவிலிருந்து தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட நிலையில், ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து கோரியும், வளர்ச்சிப் பணிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்குமாறும் அம்மாநில அரசு மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்குப் போதிய திட்டங்களும் சிறப்பு நிதியும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆந்திராவுக்குச் சிறப்பு நிதி ஒதுக்கக் கோரி, ஆந்திர எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

ஆந்திராவுக்குச் சிறப்பு நிதி அளிப்பது தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்பட்டுவருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏற்கனவே உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (பிப்ரவரி 9) தனது ட்விட்டர் பக்கத்தில், ”சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் மற்றும் பொலவரம் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற ஆந்திர மக்களின் கோரிக்கையை காங்கிரஸ் ஆதரிக்கிறது. இந்த விவகாரத்தில் நீதி கிடைப்பதற்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய நேரமிது” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஆந்திராவுக்குச் சிறப்பு நிதி வழங்காததால் பாஜக கூட்டணியில் உள்ளதும் ஆந்திராவின் ஆளும்கட்சியுமான தெலுங்கு தேசம் பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அண்மையில் காங்கிரஸ் நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “தற்போது நாடு முழுவதும் பாஜகவுக்கு மக்களிடையே இருக்கும் அதிருப்தியைக் காங்கிரசுக்கு ஆதரவாக மாற்ற காங்கிரஸ் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும், இந்த ஆண்டின் இறுதியிலேயேகூட நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 9 பிப் 2018