மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

சுங்க வரி உயர்வுக்கு வரவேற்பு!

சுங்க வரி உயர்வுக்கு வரவேற்பு!

அடுத்த நிதியாண்டுக்கான (2018-19) பட்ஜெட்டில் உணவு தயாரிக்கும் மூலப்பொருள்கள் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளதை வரவேற்பதாக பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வெளியான பட்ஜெட் அறிவிப்பில் சில இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருள்கள் மற்றும் உணவு உற்பத்திக்கான மூலப் பொருள்கள் சிலவற்றின் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் போன்றவற்றின் சுங்க வரி 20 சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று இந்திய அளவில் பதஞ்சலி நிறுவன பொருள்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்ற வேளையில் இதுகுறித்து அவர் எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், “பன்னாட்டுப் பொருள்களின் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டதன் மூலம் இந்திய பொருள்கள் விற்பனை அதிகமாக இருக்கும். இதன்மூலம் இந்தியா முன்னேற்றமடையும். நமது பாரம்பர்ய உணவு முறை பாதுகாக்கப்படும்” என்று தெரிவித்தார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 9 பிப் 2018