மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

காலிறுதியில் வெளியேறிய இந்தியா!

காலிறுதியில் வெளியேறிய இந்தியா!

பேட்மிண்டன் ஆசியா டீம் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவி, தொடரிலிருந்து வெளியேறியது.

மலேசியாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர்கள் மோதும் ஆசியா டீம் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. அதன் லீக் போட்டிகள் முடிவடைந்து காலிறுதி போட்டி இன்று (பிப்ரவரி 9) தொடங்கியது. இதில் இந்தியா, இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு இடையே மொத்தம் 5 போட்டிகள் நடைபெற்றது. அதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, இந்தோனேசியாவின் பித்ரியானியை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 21-13, 24-14 என சிந்து வெற்றி பெற்றார்.

ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டி மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவின் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. எனவே இந்தோனேசிய அணி 5 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பினைப் பெற்றது. இதனால் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருதப்பர்னா பாண்டா விளையாடவிருந்த கடைசிப் போட்டி ரத்து செய்யப்பட்டது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 9 பிப் 2018