மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து!

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து!

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு ஆணையம் இன்று (பிப்ரவரி 9) அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 பணியிடங்களை நிரப்புவதற்கு செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடைபெற்றுத் தேர்வு முடிவுகள் நவம்பர் 7 அன்று வெளியிடப்பட்டது. ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதிய தேர்வில் 2200 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்தத் தேர்வு முடிவில் முதலில் வெளியிட்ட மதிப்பெண்களுக்கும், ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகலில் உள்ள மதிப்பெண்களுக்கும் 60 முதல் 80 மதிப்பெண்கள் வரை வித்தியாசம் இருந்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தேர்வு முடிவை ரத்து செய்து ஆசிரியர்தேர்வு ஆணையம் உத்தரவிட்டது.

இதுகுறித்து 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது வரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். மதிப்பெண்களைப் பதிவிட்ட டேட்டா என்ட்ரி நிறுவனத்தைச் சேர்ந்த ஷேக் தாவூத் (32), தனியார் நிறுவன மேலாளர் ரகுபதி(34) , அயனாவரத்தை சேர்ந்த சுரேஷ் பால் (34), திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்த தலைமை ஆசிரியர் சின்னசாமி (52), கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பரமசிவம் (32), சிட்லப்பாக்கத்தை சேர்ந்த நாதன் (45) ஆகிய 7 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் நேற்று திருச்சி வயலூரை சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் தினேஷ் (26) என்பவரையும் கைது செய்துள்ளனர்.

தினேஷ் சில முக்கிய அதிகாரிகளின் உதவியுடன், தேர்வு எழுதியவர்களைச் சந்தித்து அதிக மதிப்பெண் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தினேஷுக்கு உதவியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த முறைகேட்டைத் தொடர்ந்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வெள்ளி 9 பிப் 2018