மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

திருநங்கைகளுக்கான நலன்புரி ஆணையம்!

திருநங்கைகளுக்கான நலன்புரி ஆணையம்!

மகாராஷ்டிராவில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்துவந்த மூன்றாம் பாலினத்தவருக்கான நலத்துறை ஆணையத்தை அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. மூன்றாம் பாலினத்தவர் சமூகத்தின் நலனுக்காக 5 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சமூக நீதித் துறை அமைச்சர் திலிப் காம்ப்ளே கூறுகையில், ”இன்னும் ஒரு மாதத்துக்குள் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான நலத்துறை ஆணையம் அமைக்கப்படும். அதன் மூலம் அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, சுகாதாரத் திட்டங்கள் ஆகியவற்றில் பயனடைய முடியும். மேலும், அவர்களின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும். அத்தகைய வாரியத்தை அமைக்கும் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. முதலில் மூன்றாம் பாலினத்தவர் நலத் துறை வாரியம் முந்தைய அரசாங்கத்தால் 2014ஆம் ஆண்டு கருத்தமைக்கப்பட்டது.

திருநங்கைகளுக்கான கல்வி, சுகாதாரம், வீட்டுவசதிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பரந்த கட்டமைப்பைத் தயாரித்து,வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொறுப்பு மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, நீண்ட காலமாக நிலுவையில் கிடந்த இந்தத் திட்டத்துக்கு அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது” என்றார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 9 பிப் 2018