மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

கர்நாடக முதல்வர் நேரம் ஒதுக்கவில்லை!

கர்நாடக முதல்வர் நேரம் ஒதுக்கவில்லை!

காவிரி நீர் விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த இதுவரை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேரம் ஒதுக்கவில்லை என்று கூறியுள்ளார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று (பிப்ரவரி 8) தஞ்சாவூர் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் இல்ல விழாவில் கலந்துகொண்டார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி டெல்டா பகுதியில் சம்பா பயிரைக் காப்பாற்றத் தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தார்.

“காவிரி விவகாரம் தொடர்பாகச் சந்திக்கவருவதாக, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அவர்களிடமிருந்து இதுவரை பதில் வரவில்லை. டெல்டா பகுதியில் சம்பா பயிரைக் காப்பாற்ற 7 முதல் 10 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. அந்த நீர் கிடைக்காவிட்டால் பாதிப்பு ஏற்படுமென்றுதான், கர்நாடக முதலமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. ஆனால், அவர் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை” என்றார்.

காவிரிப் பிரச்சினையில் 17 ஆண்டுகள் விசாரணை செய்த பின்னரே காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது என்றும், இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் செயல்படுத்துவது மத்திய அரசின் கடமை என்றும் தெரிவித்தார் ஓபிஎஸ்.

“மத்திய அரசின் கடமையாக இருக்கிற காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு, இதுவரை நியாயத்தின் அடிப்படையில் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் உச்ச நீதிமன்றத்துக்கே சென்றிருக்கிறோம். விரைவில் நல்ல தீர்ப்பு வரும்” என்று கூறினார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 9 பிப் 2018