மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

பற்றி எரிந்த கோயில் தேர்கள்!

பற்றி எரிந்த கோயில் தேர்கள்!

வேலூர் பொன்னியம்மன் கோயிலில் 2 தேர்கள் நேற்றிரவு (பிப்ரவரி 8) பற்றியெரிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் ஸ்ரீ சாலை கெங்கையம்மன் கோயில் மற்றும் பொன்னியம்மன் கோயில் உள்ளது. கெங்கையம்மன் கோயிலுக்குச் சொந்தமான பெரிய மரத் தேரும், பொன்னியம்மன் கோயிலுக்கு சொந்தமான சிறிய மரத் தேரும் கோயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு இந்த இரண்டு தேர்களும் திடீரெனத் தீப் பிடித்து எரிந்தன. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயைப் போராடி அணைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சத்துவாச்சாரி போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டுத் தப்பி சென்றுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் ரத்தின சபையாகத் திகழும் திருவாலங்காட்டில் உள்ள புகழ்பெற்ற வடாரண்யேஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம் நேற்று முன் தினம் இரவு (பிப்ரவரி 7) பற்றி எரிந்து சாம்பலானது.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதியன்று இரவு 10.30 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு ராஜ கோபுர பகுதியில் இருந்து சுந்தரேஸ்வரர் சுவாமி சன்னிதி செல்லும் வழியில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தின் அருகில் தீ விபத்து ஏற்பட்டு, 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின. தீ விபத்து ஏற்பட்ட மண்டபத்திற்கு அருகே உள்ள பசுபதி ஈஸ்வரர் சன்னதி மேற்கூரை பிப்ரவரி 6ஆம் தேதி இடிந்து விழுந்தது.

இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 8) மின்கசிவு ஏற்பட்டதால், மீண்டும் மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 9 பிப் 2018