மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

சாமி ஸ்கொயர்: த்ரிஷாவுக்கு பதில் யார்?

சாமி ஸ்கொயர்: த்ரிஷாவுக்கு பதில் யார்?

சாமி ஸ்கொயர் படத்தில் த்ரிஷா விலகியதையடுத்து அந்தக் கதாபாத்திரத்தில் வேறு நடிகையை நடிக்கவைக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன.

ஹரி இயக்கத்தில் விக்ரம்-த்ரிஷா ஜோடியாக நடித்து 2003இல் வெளியான படம் சாமி. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகமான சாமி ஸ்கொயரின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நடிக்க ஒப்பந்தமாகினர். ஆனால் படத்திலிருந்து த்ரிஷா வெளியேறுவதாகத் தகவல்கள் வெளியாகின.

சமீபத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் ஹரி, “இதுல கீர்த்தி சுரேஷ், த்ரிஷா இவங்க ரெண்டு பேரும் ஹீரோயினா நடிக்கிறாங்க. மொத்தம் 5 சாங், 4 பைட், 21 சேசிங் படத்துல இருக்குது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மத்தபடி இந்தப் படத்தை பத்தி அதிகம் சொல்ல முடியாது” என்று கூறினார். இதன் மூலம் த்ரிஷா இப்படத்தில் இருப்பதை உறுதிசெய்தார்.

ஆனால், த்ரிஷா இதை மறுக்கிறார். இதுதொடர்பாக த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணனை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, “அந்த படத்திலிருந்து தான் விலகுவதாக த்ரிஷாவே அறிவித்துவிட்டார். அந்தப் படம் தொடர்பாக இனி எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை” என்று கூறினார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 9 பிப் 2018