மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

போக்குவரத்துத் துறையில் 1520 கோடி ஊழல்!

போக்குவரத்துத் துறையில் 1520 கோடி ஊழல்!

போக்குவரத்துத் துறையில் 1520கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இதனை விசாரிக்க வேண்டுமெனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைக் காரணம் காட்டி, அவர்களுக்கு சம்பள உயர்வு, நிலுவைத் தொகை போன்றவை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக கடந்த மாதம் அரசு பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதற்குக் காரணம் போக்குவரத்து துறையில் நடந்த நிர்வாக சீர்கேடுதான் என்று பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் போக்குவரத்து துறையில் ஊழல் நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். அவர் "அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தேவைக்கும் அதிகமாக 38,000 பணியாளர்களை முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நியமித்துள்ளார். இதனால்தான் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டது என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார். செந்தில்பாலாஜி எத்தனை பேருந்துகளை வாங்கினார் என்ற புள்ளி விவரம் எங்களிடம் உள்ளது எனவும் கூறியுள்ளார். ஆனால் முதலமைச்சரும், அமைச்சரும் ஊழல் பணத்தில் பேருந்துகளை வாங்கி இயக்குவதாக செந்தில் பாலாஜி கூறியுள்ளார். முன்னாள், இந்நாள் போக்குவரத்துத் துறை அமைச்சர்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் செய்த ஊழல்களும் அம்பலமாகியிருக்கின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது அறிக்கையில், "தேவைக்கும் அதிகமாக பணியாளர்களை நியமித்தது கண்டிப்பாக ஊழல் நோக்கம் கொண்டதாகத் தான் இருக்க முடியும். ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிக்கு ரூ.41 லட்சம் முதல் ரூ.51 லட்சம் வரை கையூட்டு வாங்கப் பட்டதாக குற்றச்சாற்றுகள் எழுந்தன. 38,0001 பணியாளர்களிடம் சராசரியாக ரூ.41 லட்சம் வாங்கப்பட்டதாக வைத்துக் கொண்டால், ரூ.15201 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகத் தான் அர்த்தமாகும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வெள்ளி 9 பிப் 2018