மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெ.சிலை!

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெ.சிலை!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சிலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

அதிமுகவின் தலைமை அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ளது. இதன் முகப்பில் முன்னாள் முதல்வரும் அதிமுகவைத் தொடங்கியவருமான எம்.ஜி.ஆரின் சிலை உள்ளது.

இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை வைக்க வேண்டும் எனத் தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிமுக தலைமைக்குக் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து தலைமை அலுவலகத்தில் அவருக்குச் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கின. எம்.ஜி.ஆர் சிலை அருகேயே ஜெயலலிதா சிலை அமையவுள்ளதால், எம்.ஜி.ஆர் சிலை அருகே இருந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டு வேறு இடத்தில் வைக்கப்படவுள்ளது. இந்தப் பணிகளை முன்னிட்டு எந்த சேதமும் ஏற்படாத வகையில் எம்.ஜி.ஆரின் சிலை துணி போட்டு மறைக்கப்பட்டுள்ளது. ஒரே பீடத்தில் இருவரது சிலைகள் அமையவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் திறக்கும் வகையில் சிலை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 9 பிப் 2018