மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

மீனாட்சியம்மன் கோயிலில் மீண்டும் தீ விபத்து!

மீனாட்சியம்மன் கோயிலில் மீண்டும் தீ விபத்து!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நேற்றிரவு (பிப்ரவரி 8) மீண்டும் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாகக் கவனிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மீனாட்சியம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்வது வழக்கம். இதனால் பாதுகாப்பு கருதி ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்து உடனடியாகக் கவனிக்கப்பட்டு விரைந்து தீ அணைக்கப்பட்டது; பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. பின்னர் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரம் கால் மண்டபம் அருகே சுமார் 70000 சதுர அடி பரப்பளவு கொண்ட வீரவசந்தராயர் மண்டபத்தின் மேற்கூரையும், ஒரு சில கல் உத்திரங்களும் இடிந்துவிழுந்தன. பின்னர் பிப்ரவரி 6 அன்று, வீரவசந்தராயர் மண்டபத்திற்கு அருகே உள்ள பசுபதி ஈஸ்வரர் சன்னதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள கடைகளால் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அங்குள்ள கடைகளை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து வியாபாரிகள் அங்குள்ள கடைகளை காலி செய்யும் பணிகளை இன்று தொடங்கியுள்ளனர். இதனையடுத்து இன்று பகல் 2 மணிக்குள் அனைத்து கடைகளும் காலி செய்யப்படும். வருவாய்துறை, காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் கடைகளை அகற்றி வருகின்றனர். மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து காலி செய்யும் கடைகளுக்கு குன்னத்தூர் சத்திரத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது அதிகாரிகளைத் தவிர கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 9 பிப் 2018