மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

கிராமத்துப் பெண்ணாக வாழ்ந்த சமந்தா

கிராமத்துப் பெண்ணாக வாழ்ந்த சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் சமந்தா, தெலுங்கில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்துவரும் 'ரங்கஸ்தலம்' படத்தின் சமந்தா கேரக்டரை அடையாளம்காட்டும் டீசர் வெளியாகியுள்ளது.

சுகுமார் இயக்கிவரும் இப்படம், 1980களில் நடக்கும் சம்பவத்தைச் சொல்லும் கதையாக உருவாகிவருகிறது. படத்தின் கதைக்காக அந்தக் காலத்துப் பெண்ணாக தன்னை மாற்றிக்கொண்டு பாவாடை தாவணியில் நடித்துள்ளார் சமந்தா. கிராமத்து கெட்டப்பில் இருக்கும் சமந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தின. ஆனால் இந்தப் படத்தின் டீசரில் ராம் சரண் மட்டுமே இடம்பெற்றிருந்தார். சமந்தா இடம்பெறவில்லை.

ரசிகர்களின் ஏமாற்றத்தை உணர்ந்த இயக்குநர் சுகுமார் சமந்தா கேரக்டர் குறித்தான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியாகும் என்று அறிவித்தார். அதன்படி சமந்தா கேரக்டர் டீசர் வெளியாகியிருக்கிறது. இதில் சமந்தா முழுக்க கிராமத்துப் பெண்ணாகப் பாவாடை தாவணியில் வலம்வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஓடை நரில் தண்ணீர் எடுக்கச்செல்வது, சைக்கிள் ஓட்டுவது, கிராமத்துப் பெண்களோடு விறகு சுமந்துசெல்வது, துணி துவைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகளைப் பார்க்கும்போது முழுக்க அவர் கிராமத்து பெண்ணாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இதுவரை மாடர்ன் பெண்ணாக நடித்துவந்த சமந்தா, இந்தப் படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

'ரங்கஸ்தலம்' சமந்தா கேரக்டர் டீசர்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 9 பிப் 2018