மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

அறிவுசார் சொத்துப் பட்டியலில் இந்தியா!

அறிவுசார் சொத்துப் பட்டியலில் இந்தியா!

அமெரிக்க தொழில் துறை அமைப்பு வெளியிட்டுள்ள அறிவுசார் சொத்துக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 44ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்க அறிவுசார் சொத்துரிமை ஆலோசனை மையம் மற்றும் உலகளாவிய கொள்கை ஊக்குவிப்பு மையம் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இந்தியாவின் காப்புரிமைச் சூழல் வலுப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ஊக்குவிப்புகள் அதிகரித்துள்ளன. பாதுகாப்பும் அதிகரித்துள்ளது. இதனால் அறிவுசார் சொத்துப் பட்டியலில் இந்த ஆண்டு இந்தியா 44ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் மொத்தமாக 501 நாடுகள் இடம் பெற்றுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து அரசு அதிகாரி ஒருவர் பிசினஸ்லைன் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "தனிநபர்களாலும், தனியார் நிறுவனங்களாலும் பல்வேறு ஆய்வுகளும், மதிப்பீடுகளும் வெளியிடப்படுகின்றன. இந்த ஆய்வறிக்கைகளை அரசாங்கம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்வதில்லை. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இந்தியா 451ஆவது இடத்திலும், அதற்கு முந்தைய ஆண்டில் 431ஆவது இடத்திலும் இருந்தது. இந்த ஆய்வை எடுத்துக்கொண்டால் ஒப்பீட்டளவில் நம்முடைய திறன் மேம்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் விவசாயத் துறையில் அறிவுசார் சொத்துகளை எப்படிப் பாதுகாப்பது, அதன்மூலம் பயிர் வகைகளை எப்படி மேம்படுத்துவது போன்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 9 பிப் 2018