மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

ஜீயரைக் கண்டித்து உண்ணும் விரதம்!

ஜீயரைக் கண்டித்து உண்ணும் விரதம்!

கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஜீயர் உண்ணாவிரதம் இருந்துவரும் நிலையில், அவரைக் கண்டித்து கோவையில் தபெதிக சார்பில் உண்ணும் விரதம் போராட்டம் நடைபெற்றது.

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திருவில்லிப்புத்தூர் ஜீயர் கடந்த மாதம் உண்ணாவிரதம் இருந்தார். அதிகாரிகளின் வேண்டுகோளினால் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்ட ஜீயர், பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் வைரமுத்து ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்கவில்லையெனில் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

அதன்படி நேற்று மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கிய ஜீயர் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்துவருகிறார். பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஜீயர் உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கு இன்று (பிப்ரவரி 9) நேரில் சென்று அவரிடம் ஆசீர்வாதம் பெற்றார். ஜீயர் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ராஜா, அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

"உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று ஜீயரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன். ஆண்டாள் குறித்து ஆய்வு நடத்தவில்லை என்று இண்டியானா பல்கலைக்கழகம் கூறுகிறது. நாளிதழ் ஒன்றில் வைரமுத்து எழுதிய 144 கட்டுரைகளும் சனாதன தர்மத்திற்கு எதிரானவை. தனது கட்டுரைகளில் முதலில் பெருமைகளை கூறிவிட்டு கடைசியில் இகழ்வதுதான் வைரமுத்துவின் பாணி. மோட்சம் பற்றி திருவள்ளுவர் பேசவில்லை என வைரமுத்து பேசியதும் பொய். தமிழ்த் தாத்தா உ.வே.சா. குறித்தும் தனது கட்டுரையில் தவறான தகவல்களை வைரமுத்து கூறியுள்ளார்" என்று கூறியுள்ளார் ஹெச்.ராஜா.

இதனிடையே ஜீயரின் உண்ணாவிரதம் குறித்து முன்னாள் ஜீயர் கூறுகையில், "ஜீயர் உண்ணாவிரதம் இருப்பது சம்பிரதாயத்துக்கு எதிரானது. அவர் சோடா பாட்டில் வீசுவேன், கல் எறிவேன் என்று கூறியதும் தவறு” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜீயரின் உண்ணாவிரதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவையில் இன்று பெரியார் சிலை அருகில் உண்ணும் விரதம் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் ஜயரின் உண்ணாவிரதம் கலவரத்தைத் தூண்டும் விதமாக உள்ளதாகத் தெரிவித்தனர். மேலும் ஜீயர் போன்றோர் கோவில்களில் உண்ணாவிரதம் இருக்கத் தடை விதிக்கக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வெள்ளி 9 பிப் 2018