மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

கோலியைச் சீண்டும் பாகிஸ்தான் பயிற்சியாளர்!

கோலியைச் சீண்டும் பாகிஸ்தான் பயிற்சியாளர்!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக அம்மண்ணில் சதம் அடிப்பது கடினமானது என பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் இந்திய அணி சிறப்பாக விளையாடி, ஒருநாள் தொடரில் 3-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்தத் தொடரில் இரண்டு சதங்களை அடித்துள்ள விராட் கோலிக்குப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், "விராட் கோலி சிறந்த வீரர். அவர் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் விளையாடுவதைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும் அவர் பாகிஸ்தானில், பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரன் சேர்ப்பது கடினம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்திய அணி விரைவில் பாகிஸ்தானில் விளையாடும் என நம்புகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார். இந்திய அணி கடைசியாக 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடியது. அதன் பிறகு இரு நாட்டு அரசுகளுக்கும் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களால் இந்திய அணி அங்கு சென்று விளையாடவில்லை. இந்தமுறை பாகிஸ்தான் பயிற்சியாளர் ஆர்தர் புதிய முறையில் இந்திய அணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றுதான் கூற வேண்டும்.

29 வயதான விராட் கோலி இதுவரை விளையாடியுள்ள ஒன்பது நாடுகளிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார். அது மட்டுமின்றி அவர் ஒவ்வொரு போட்டியில் விளையாடும்பொழுதும் முன்னணி வீரர்கள் பலர் படைத்த சாதனைகளை தகர்த்து வருகிறார். இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடினால்தான் அவரால் பாகிஸ்தான் பயிற்சியாளரின் சவாலை ஏற்க முடியும்.

பாகிஸ்தானின் சிறந்த மட்டையாளர்களில் ஒருவரான ஜேவேத் மியாண்டாட் கோலியை ஒரு ஜனியஸ் என்று புகழ்ந்துள்ளார் என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 9 பிப் 2018