அதிகரிக்கும் பெரு நிறுவனக் கடன்!


அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இந்தியாவின் கார்பரேட் கடன்கள் 2 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்று இந்தியா ரேட்டிங்ஸ் ஆய்வறிக்கை கூறுகிறது.
இதுகுறித்து இந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 'பெரும்பாலான பொதுத் துறை வங்கிகளின் லாபத்தில் இழப்பும், வாராக்கடன் சுமைகளும் அடுத்த சில காலாண்டுகளுக்குத் தொடரும். மத்திய அரசின் மறு மூலதன நடவடிக்கைக்குப் பிறகும் பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் சுமை குறையவில்லை. வரும் ஏப்ரல் 1ஆம் முதல் புதிய கணக்கியல் விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளன. பெரு நிறுவனங்களுக்கான கடன் மேலும் அதிகரித்து அடுத்த 12 முதல் 18 மாதங்களில் 20 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.'